திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாதென அமைச்சர் சேகர்பாபு கூறினாரா என கோயில் செயல் அலுவலரிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பை கோயில் செயல் அலுவலர் தானாக செய்தாரா அல்லது
அமைச்சர் சேகர்பாபு சொல்லி செய்தாரா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றாத ஆட்சியர், காவல் ஆணையரை மன்னிக்க இயலாது என கூறிய நீதிபதி,
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் குற்ற உணர்வின்றி இருப்பதாக சாடினார்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கூடுதல் பதிலளிக்க அடுத்த மாதம் 2ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டுமென்ற கோரினார்.
இதையேற்ற நீதிபதி, அன்றைய தினம் வழக்கை ஒத்திவைத்தார்.
















