கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பிரசார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வேலுச்சாமிபுரம் பகுதி மக்களிடம் கடந்த 3 மாதங்களை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, மத்திய தடயவியல் துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் என 10-க்கும் மேற்பட்டோர் நேற்று சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்திற்கு விஜயின் பிரசார வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாகனத்தை அதிகாரிகள் பார்வையிட்டுவரும் நிலையில், ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
















