கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்
தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், அதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்வதில்லை, தரகர் வேலையும் பார்ப்பதில்லை, இந்தியா கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது, தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், கூட்டணி அல்லது தொகுதிகள்குறித்து பொதுவெளியில் பேசினால், அது பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும். சென்னையில் நடைபெறும் ஜனநாயக பொங்கல் விழாவில் கூட்டணிகுறித்துப் பேசிக் குழப்பம் விளைவிப்போர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
















