தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை, துணை முதலமைச்சர் உதயநிதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜகவின் கலை மற்றும் கலசார பிரிவு சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் பொங்கல் விழா நடைப்பெற்றது.
இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்சார் போர்டு விவகாரத்தில் பாஜகவை தொடர்புபடுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாகவும், திமுகவும், காங்கிரசும்தான் கலைத்துறையை ஒடுக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
ஊடக விவாத நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.
















