பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு மதுரையின் பாலமேடு பகுதியில் மஞ்சள் செடி அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு பிரதான பொருளாக விளங்கும் மஞ்சள் கிழங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மஞ்சள் அதிகளவில் விளைச்சல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் இருமடங்கு லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
















