அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் பெண் கஞ்சா வியாபாரி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் எடுத்த புகைப்படத்திற்கு பல காரணங்களை கூறி மழுப்பிய அமைச்சர், கஞ்சா வியாபாரி உடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள்,திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















