மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
5 அணிகளுக்கு இடையே நடைபெறும் மகளிர் பிரீமியம் லீக் தொடர் நவி மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது…
















