சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆப்ரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக் என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மீது 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாத கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கள் போர் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால் உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், நீதியை விட்டுத் தப்பிக்க முயன்றாலும் உங்களைக் கண்டுபிடித்துக் கொல்லுவோம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
















