உள்ளூர் தயாரிப்பு பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.
வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வியாபாரிகள் கலந்துகொண்டு உள்ளூர் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















