நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் உதகையின் பல்வேறு இடங்களில் காலை முதலே மிதமான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததோடு கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த காலநிலை மாற்றத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது. இருப்பினும் மிதமான மழை பெய்வது விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















