மெரீனா கடற்கரையில் சென்ற மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த மாநில கல்லூரி மாணவர்களால் பரபரப்பு….
சென்னை மெரினா கடற்கரையில் மாநகர் பேருந்து கண்ணாடியை உடைத்த மாநில கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லியில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
மாநில கல்லூரி அருகே வந்தபோது, பேருந்தின் கதவை திறக்குமாறு கூறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எனினும் சிக்னலில் பேருந்து நின்றதால், ஓடுநர் கதவை திறக்கவில்லை. இதனால் மாணவர் ஒருவர் பேருந்தின் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்தார்.
இதையடுத்து சிசிடிவி காட்சியை கொண்டு மாணவர் அன்பரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
















