பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் ஆம்னி பேருந்துகளில் கட்டண விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பேருந்துகளிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதன்படி சென்னையில் இருந்து நெல்லைக்கு 4 ஆயிரத்து 200 ரூபாயாகவும் இதேபோல் சென்னை – கோவை இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்த கூடாதென அரசு பலமுறை எச்சரித்தாலும் அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















