டென்மார்க் இளவரசி இசபெல்லாவை, டிரம்ப்பின் மகன் திருமணம் செய்தால் கிரீன்லாந்தை வரதட்சணையாக கேட்கலாம் என்ற பதிவு வைரலாகி வருகிறது.
டென்மாா்க்குக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவருகிறது. இந்தத் தீவின் அமைவிடம் ராணுவ முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வோம் என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், அந்த தீவில் உள்ள அரியவகை கனிம வளங்களை அபகரிப்பதே டிரம்ப்பின் திட்டம் என கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டென்மார்க், அமெரிக்க வீரர்கள் கிரீன்லாந்துக்குள் நுழைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை, டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் மணமுடிக்க வேண்டும் என எக்ஸ் பயனர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், இசபெல்லா – பாரன் டிரம்ப் இருவரின் படங்களையும் ஒன்றாகச் சித்திரித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















