ஜம்முவில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சிலைக்குக் குளிரக் கூடாது என்பதற்காகப் போர்வை போர்த்தி பராமரித்து வரும் தாயின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
ஜம்முவின் ரன்பீர் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்னம் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்.
இதனையடுத்து அவரது சொந்த கிராமத்தில் குர்னம் சிங்குக்காகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது தாயான ஜஸ்வந்த் கவுர், அந்தச் சிலையை உயிருள்ள மகனாகவே கருதி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் ஜம்முவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மகனுக்குக் குளிரும் எனக் கருதி, அவரது சிலைக்குப் போர்வையை போர்த்தி ஜஸ்வந்த் கவுர் பராமரித்து வருகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், தாயின் அன்பிற்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லையென நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















