சிவகாசி அடுத்த மங்களம் கிராமத்தில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ வெகு விமர்சையாக நடைபெற்றது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய பாண்டுரங்கன், கலாசார, பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் பொங்கல் விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதென எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















