கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் கட்டுமான பணியின் போது புதையல் கிடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த கங்கவ்வா பசவராஜா என்பவர் தனது வீட்டின் கட்டுமான பணியைத் தொடங்கியுள்ளார்.
அஸ்திவாரத்திற்காகப் பள்ளம் தோண்டும்போது அவருக்குத் தங்க நகைகள் பூட்டப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடைத்தது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் பெட்டியில் பழங்கால தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இதனை மீட்டக் காவல்துறையினர் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின்போது தங்கம் கிடைத்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
















