நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் பாஜக சார்பில் ‘மோடி பொங்கல் விழா’ நடைபெற்றது.
இதில் பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் அசோக் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், பாஜகவினர் ஒன்றிணைந்து 301 பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு பரிமாறினர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழா மக்களின் கவனத்தை பெற்றது.
















