மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது.
பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், வினோத் பி செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த கொண்டாட்டத்தில் கோலப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
தென் சென்னை மாவட்ட அமைப்புசாரா பிரிவின் துணைத் தலைவர் வெங்கடேஷ் ஏற்பாடு செய்திருந்த இந்த பொங்கல் விழாவில் பொதுமக்களும், பெண்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
















