உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், குஜராத் மண்டல மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர், உரையாற்றிய அவர், இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் எட்டிய மைல்கற்களை பட்டியலிட்டார். குறிப்பாக, அதிக மொபைல் டேட்டாகளை பயன்படுத்தும் நாடாகவும், UPI பரிவர்த்தனையிலும் இந்தியா முன்னணியில் விளங்குகிறது எனக் கூறினார்.
மேலும், நாம்தான் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர் என பெருமிதம் தெரிவித்த அவர், தடுப்பூசி தயாரிப்பதில், ஜெனரிக் மருந்து உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
















