நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி குஜராத்தின் முதல் போட்டி வதோதராவில் நடைபெற்ற நிலையில், நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 93 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் 93 ரன்களை குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 28,068 ரன்களை குவித்துள்ள கோலி, இலங்கை முன்னாள் வீரர் சங்ககராவை பின்னுக்கு தள்ளியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
















