சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாரிவாக்கம் பகுதியில் சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது போதையில் அட்டூழியம் செய்ததால், அங்கிருந்த பொதுமக்கள் தட்டி கேட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த சந்துரு உள்ளிட்டோர் தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியுள்ளனர்.
இதில் தெருவில் நடந்து சென்ற 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்துரு உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
















