தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளம் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் இருந்து மீண்ட நிலையில், தற்போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
















