ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சு என்பது தாக்குதல் மற்றும் தற்காப்பு திறன்கள் இரண்டையும் கற்பிக்கிறது. இதனை நடிகரும், ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பல ஆண்டுகளாக கற்று வந்தார்.
இவருக்கு ஜப்பானிய தற்காப்புக் கலைகளின் நிபுணரான பேராசிரியர் டாக்டர் சித்திக் மஹ்மூடி பயிற்சி அளித்தார். இந்நிலையில் ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு, கோல்டன் டிராகன்ஸ் எனும் அமைப்பு தற்காப்பு கலைகளின் புலி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கராத்தேவுடன் சேர்ந்து கென்ஜூட்சுவை பயின்ற பவன் கல்யாண், ஒழுக்கத்தால் இதனை சாத்தியமாக்கியுள்ளார்.
ஜப்பானிய பயிற்சியாளர்களை தவிர்த்து, டகேடா ஷிங்கன் குலத்தில் சேர்க்கப்பட்ட முதல் தெலுங்கு பேசும் தனிநபராகவும் பவன் கல்யாண் உருவெடுத்துள்ளார்.
ஜப்பானிய வாள் சண்டையின் நவீன பதிப்பான கெண்டோவில் உயர் மட்ட தேர்ச்சி அடைந்து பட்டத்தை வென்ற பவன் கல்யாணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
















