உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் லோகோ வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், பிரிக்ஸ் அமைப்பு வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க தளமாக உருவாகியுள்ளது என தெரிவித்தார்.
மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி, நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் பிரிக்ஸ் கவனம் செலுத்துகிறது எனவும் ஜெய்ச்சங்கர் கூறினார்.
















