உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் வளமான அடையாளமாகவும், தேசிய வேளாண் பாரம்பரியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார மரபுகளை இந்தப் பண்டிகை உணர்த்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அர்ப்பணிப்புணர்வுடன் உழைத்து வரும் அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் நாட்டின் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்கான வாய்ப்பாக இந்தப் பண்டிகை அமைந்துள்ளது எனவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
















