தனது படங்கள் எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் விடுதியில் திரௌபதி 2 படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நடிகர்கள் ரிச்சர்ட் ரிஷி, ஓய்.ஜி.மகேந்திரன், நட்டி, வேலராம மூர்த்தி, இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், திரௌபதி 2 திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் மோகன் ஜி சிம்மாசனத்தில் அமரப்போகிறார் என தெரிவித்தார்
. திரௌபதி-2 திரைப்படம் கற்பனை கதை அல்ல என்றும், அந்த காலத்தில் நிலைநாட்டப்பட்ட தர்மத்தை தற்போது வரை காப்பது குறித்த உண்மை கதை எனவும் ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இயக்குநர் மோகன் ஜி, தன்னுடன் பணியாற்றுபவர்களை சிலர் மிரட்டுவதாகவும், இதனால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
திரௌபதி-2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
















