ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 1008 மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு திருப்பாவை பாடினர்……
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 1008 மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து ஒரே இடத்தில் கூடி
ஆண்டாள் பாவை பாசுரம் பாடிய நிகழ்வு காண்போரின் கவனத்தை ஈர்த்தது.
கோதை பிறந்த ஊர், கோவிந்தன்ன் வாழும் ஊர் என்ற சிறப்பை பெற்றுள்ள 108 திவ்யதேசங்கள் மிகவும் சிறப்பு பெற்றதான ஸ்ரீவில்லிபுத்தூரில் “பெண்மையைப் போற்றுவோம்,கோதையின் பாதையில்” என்ற தலைப்பில் ஆண்டாள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. 1008 மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து ஒரே இடத்தில் கூடி ஆண்டாள் பாவை பாசுரம் பாடி அசத்தினர்.
ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையை நிலைநாட்டும் வகையிலும், பாசுரங்களின் ஆன்மீக மகத்துவம், தமிழ் பாரம்பரியம், பக்தி, பெண்களின் ஆன்மீக பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு.
அகத்தியர் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற முதல் வருடமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் துவங்கும் இது போன்ற நிகழ்வுகள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















