பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
30 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்தனர். அதிகாலை 3 மணி முதல் கடலில் புனித நீராடிய பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தைத்திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூர் நகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
















