டெல்லி வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர், இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து டெல்லியில், சீன அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான நிர்வாகிகள், பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசினர்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளையும் அவர்கள் சந்தித்தனர். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நுாற்றாண்டுகளாக வெற்றிநடை போடும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு எப்படி செயல்படுகிறது, அதன் கட்டமைப்பு, வெற்றிக்கான ரகசியம் உள்ளிட்டவை குறித்து, சீன கம்யூனிஸ்ட் குழுவினர் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
















