திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை போன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும், அரசு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சரின் படத்தை அகற்றி, பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
















