நெல்லையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலப்பாளையத்தில் கள்ளத் துப்பாக்கியை விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், திமுக கவுன்சிலரின் நண்பரான ரத்ன பாலா மற்றும் ஆமீர் சோகைன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட மாநிலத்திலிருந்து துப்பாக்கியை வாங்கி வந்து திண்டுக்கல்லை சேர்ந்த நபரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
ஆனால் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அதை திரும்ப பெற்றுக் கொண்டு சமூக வலைதளம் மூலம் மீண்டும் விற்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















