ஈரோடு அருகே சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டியில் பிரசித்திபெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் விழா விமர்சையாக நடத்தப்படும் இக்கோயிலில், கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பத்து சிறுவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கத்தியால் உடலை கீறி வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் தீர்த்தக்குடம் எடுத்து சுவாமி ஊர்வலமாகச் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















