ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு ஜனநாயக அமைப்பில், அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம் என்றும், ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சமச்சீரான பார்வையுடனும், மக்களின் நலனை மனதில் கொண்டும், சரியான வேட்பாளருக்கு வாக்களிப்பது நமது கடமை என குறிப்பிட்டார். மேலும், வாக்களிப்பது முதல் கடமை என்பதால் முதலில் வந்து வாக்களித்ததாக மோகன் பாகவத் தெரிவித்தார்.
















