இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் மிகவும் வளமானது என்று கூறினார்.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன என்றும், இந்தத் துடிப்பு மற்றும் தன்மையே இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பலம் எனவும் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அனைவரையும் தனித்தனியாக சந்தித்து கை குலுக்கி அன்பை பரிமாறிக் கொண்டார்.
















