ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரமான மாஸ்கோ தற்போது மிகக் கடுமையான குளிரையும் வரலாற்றில் அரிதாக காணப்படும் அளவிற்கு பெரும் பனிப்பொழிவையும் சந்தித்து வருகிறது.
இதனால் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால், நடைபாதைகள் கூட காணாமல் போயுள்ளன.
அதன் விளைவாக தனிப்பட்ட வாகன போக்குவரத்து மட்டுமல்லாமல், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
















