ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தானின் 2 ட்ரோன்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்றன. இதனை கண்ட ராணுவத்தினர் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3 பாகிஸ்தான் ட்ரோன்கள், எல்லையில் அத்துமீறி பறகக்கவிடப்பட்டதாக ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே இனி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















