மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது என்றும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
















