அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வழங்கினார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் அமெரிக்கா ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார்.
அப்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை அதிபர் டிரம்பிடம், மரியா கொரினா மச்சாடோ வழங்கினார்.
மேலும், வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக அதிபர் டிரம்பை நம்பியிருப்பதாகவும், வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது கௌரவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மரியா கொரினா மச்சாடோ ஒரு அற்புதமான பெண் என புகழாரம் சூட்டியுள்ள டிரம்ப், தாம் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது பரஸ்பர மரியாதையின் ஒரு அற்புதமான செயல் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
















