பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய இளைஞர்களை விழா குழுவினர் அறிவுறுத்திய அனுப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் அவிழ்த்து விடப்படுவதற்காக கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டன. அப்போது, போட்டி திடலில் கூடியிருந்த இளைஞர்களில் சிலர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கையில் தூக்கி பிடித்து காண்பித்தனர். இதனைக் கண்ட விழா குழுவினர், கட்சி கொடியை காண்பிக்க கூடாது எனக்கூறி இளைஞர்களை அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















