சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் தனது கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிமுக அலுவலகம் உள்ளது.
இங்கு, அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் திடீரென சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















