திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆட்டம் பாட்டத்துடன் ஞானவேல் முருகன் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36ஆம் ஆண்டு முருகன் ரத யாத்திரை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஞானவேல் முருகன் எழுந்தருளிய நிலையில், ரத யாத்திரை ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கியது.
இந்த ரத யாத்திரையில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ரத யாத்திரைக்காக 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















