வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதான வன்முறை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், காரில் வந்தவர்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி செல்ல முயன்றனர்.
அதை தடுக்க முயன்ற ரிபான் சாஹா என்ற இந்து இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டு , அவர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
















