சென்னை மேற்கு மாம்பலத்தில் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் ‘தமிழும் பாரதியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மகாகவி பாரதியாரின் வாரிசான நிரஞ்சன் பாரதி, பாஜக மாநில துணை தலைவர் மா. வெங்கடேசன், எழுத்தாளர் பழ. கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய மா.வெங்கடேசன் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மொழி அழிந்து வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசிக்க சிரமப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய நிரஞ்சன் பாரதி, மன்னர் மொழியாக இருந்த தமிழை மக்கள் மொழியாக மாற்றியவர் பாரதியார் எனவும் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் குறித்து ஆதாரம் இல்லாத கருத்துகள் வெளியாவதாகவும் தெரிவித்தார்.
















