பொங்கல் பண்டிகையை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மறு ஊடல் விழா நடத்தப்படுவது வழக்கம்,
இதில் பிருங்கி முனிவருக்கு சுவாமி காட்சியளித்ததால், அம்பாள் கோபித்துக் கொண்டு செல்வதாகவும், அவரை சுவாமி சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மறு ஊடல் விழா திருவூடல் வீதியில் கோலாகலமாக நடத்தப்பட்டது, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளை சமாதானப்படுத்தி திருக்கல்யான மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
மேளதாளத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















