ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் 33 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
பெங்களூரு நோக்கி பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து மருச்சுக்கட்டு பகுதியில் வந்த போது கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனை சுதாரித்த ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு 32 பயணிகளை பேருந்தில் இருந்து வெளியேற்றினார்.
பின்னர் பேருந்து முழுவதும் தீ பரவிய நிலையில் தீயணைப்பு வீரருக்கு தகவலளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















