உத்தரபிரதேசத்தில் அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாயை பக்தர்கள் வியப்புடன் கண்டு வழிபட்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
பிஜ்னோர் மாவட்டத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வந்த நாய் ஒன்று அனுமன் சிலையை இடதுபுறத்தில் இருந்து சுற்றி சுற்றி வந்துள்ளது.
பல மணி நேரம் சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும் நாய் சிலையை பல முறை சுற்றி வந்ததால் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 2 நாள் கழித்து துர்க்கை அம்மனையும் அதே தெருநாய் சுற்றி வர தொடங்கியது. இதனால் சோர்வடைந்த அந்த நாய் ஓரிடத்தில் ஓய்வெடுக்க தொடங்கியது.
பலரும் அதனை சாமியின் வடிவம் என கூறி வழிபட குவிந்தனர்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
உடல்நலம் பாதித்த அதற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சாமியாக நினைத்து பலரும் வழிபட்ட சம்பவத்திற்கு சிலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
















