சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவின் முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவதுபோலவும், பாதுகாப்பு படைவீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும், குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்க உள்ள விருதுக்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மேலும், துறைகள் சார்ந்த சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக 3 நாட்களுக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
















