சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து தரப்பு மக்கள் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. புனித அந்தோணியார் தேவாலயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றுக்கூடி பொங்கல் வைத்து பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினார்.
பொங்கல் விழாவை தொடர்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் மோதியதில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், ஆபத்தான நிலையில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
















