இந்தியாவின் பினாகா ராக்கெட் தயாரிப்புகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாகபுரியில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலையில் பினாகா ராக்கெட் தயாரிப்பு மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய ராஜ்நாத்சிங், பினாகா ராக்கெட் தயாரிப்புகளை வாங்க ஆர்மினியா தயாராகவுள்ள நிலையில், பிரான்ஸ் உட்பட மேலும் பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன என தெரிவித்தார். இது இந்தியாவின் ஏற்றுமதி திறனை மேலும் வலுப்படுத்துகிறது எனவும் கூறினார்.
















