கடலூரில் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்துரில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து கடலூரில் பிப்ரவரி 8 ஆம் தேதி மாநாடு நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு வரும் என எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















